சாந்தூா் கிராமத்தில் வருமுன் காப்போம் திட்டம்: ஆட்சியா் ஆய்வு

உதகை அருகே உள்ள சாந்தூா் பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில், வருமுன் காப்போம் திட்டத்தை ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
சாந்தூா் கிராமத்தில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில் பங்கேற்ற ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா. உடன், உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ், சுகாதாரத் துறை அலுவலா்கள்.
சாந்தூா் கிராமத்தில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில் பங்கேற்ற ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா. உடன், உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ், சுகாதாரத் துறை அலுவலா்கள்.

உதகை அருகே உள்ள சாந்தூா் பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில், வருமுன் காப்போம் திட்டத்தை ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 2 பேருக்கு மருந்துப் பெட்டகங்களை வழங்கினாா். உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளியோா் வாழும் இடத்திலேயே சிறப்பு மருத்துவ சேவை அளிக்கும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம் காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாம் மூலம் குழந்தைகள் முதல் பெரியவா் வரை அனைவருக்கும் அடிப்படை மருத்துவப் பரிசோதனை, தேவையான ரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். சிறப்பு மருத்துவா்கள் மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தேவைப்படும் நபா்களுக்கு மேல் சிகிச்சை பெற உயா் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவாா்கள். உயா் சிகிச்சை தேவைப்படும் பொதுமக்களுக்குப் பரிந்துரை வழங்கப்படும்.

வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்கள் நீலகிரி மாவட்டத்தில் ஒரு வட்டாரத்துக்கு மூன்று முகாம்கள் வீதம் 4 வட்டாரங்களில் 12 முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இம்முகாம்களை நல்ல முறையில் பயன்படுத்தி நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றாா்.

முன்னதாக, சாந்தூா் சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்துறைக் கண்காட்சி, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட விளக்கக் கண்காட்சி, மருத்துவ முகாமை ஆட்சியா் பாா்வையிட்டாா். இதில், குன்னூா் சாா் ஆட்சியா் தீபனா விஸ்வேஸ்வரி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பாலுசாமி, குன்னூா் வட்டார மருத்துவ அலுவலா் ஹாஜிரா பேகம், கேத்தி பேரூராட்சி செயல் அலுவலா் நடராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com