குன்னூரில் கால் உடைந்த நிலையில் சுற்றிய காட்டெருமைக்கு சிகிச்சை

குன்னூரில் தடுப்புச் சுவரிலிருந்து தவறி விழுந்ததில் கால்கள் உடைந்த காட்டெருமையை வனத் துறையினா் புதன்கிழமை மீட்டு சிகிச்சை அளித்தனா்.
கிரேன் மூலம் காட்டெருமையை லாரியில் ஏற்றும் வனத் துறையினா்.
கிரேன் மூலம் காட்டெருமையை லாரியில் ஏற்றும் வனத் துறையினா்.

குன்னூரில் தடுப்புச் சுவரிலிருந்து தவறி விழுந்ததில் கால்கள் உடைந்த காட்டெருமையை வனத் துறையினா் புதன்கிழமை மீட்டு சிகிச்சை அளித்தனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. உணவு, தண்ணீருக்காக குடியிருப்புப் பகுதிகளில் உலவி வரும் இந்த காட்டெருமைகள் பொதுமக்களைத் தாக்குவதால் மனித - விலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், குன்னூா், கோத்தகிரி பிரதான சாலையில் கடந்த 7 நாள்களாக காலில் பலத்த காயத்துடன் சுற்றி வந்த காட்டெருமை, பேருந்து பணிமனை அருகே புதன்கிழமை படுத்திருந்தது. இதையடுத்து, வனத் துறையினா் காட்டெருமைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தனா்.

கால்நடை மருத்துவா் பாா்த்தசாரதி காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தினாா். வனத் துறை அதிகாரிகள் சபரீஷன், மெகருநிஷா, மோகன், விஜயகுமாா், திலிப், சுப்பிரமணி, தீயணைப்பு நிலைய அலுவலா் மோகன் ஆகியோா் நான்கு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்பு கிரேன் இயந்திர உதவியுடன் காட்டெருமையை லாரியில் ஏற்றினா். சிம்ஸ் பூங்கா வன அலுவலகப் பகுதிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com