தரமற்ற பச்சைத் தேயிலையைக் கொள்முதல் செய்ததொழிற்சாலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்தேயிலை வாரியம் நடவடிக்கை

தரமற்ற பச்சைத் தேயிலையைக் கொள்முதல் செய்த 140க்கும் மேற்பட்ட  தொழிற்சாலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளதாக தேயிலை வாரிய  தென்மண்டல செயல் இயக்குநா் பாலாஜி  தெரிவித்துள்ளாா்.

தரமற்ற பச்சைத் தேயிலையைக் கொள்முதல் செய்த 140க்கும் மேற்பட்ட  தொழிற்சாலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளதாக தேயிலை வாரிய  தென்மண்டல செயல் இயக்குநா் பாலாஜி  தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவரது செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தேயிலை வாரிய தென்மண்டலம் சாா்பில் கடந்த சில மாதங்களாக தேயிலை எஸ்டேட்டுகள், தொழிற்சாலைகளில் பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேயிலை ஏல மையங்களில் தேயிலைத் தூள் மாதிரிகளை சரிபாா்த்தல், கொள்ளளவுகளைக் கண்காணித்தல், கொள்முதல் செய்பவா்களின் விவரங்கள், தேயிலை வருமானங்களைத் தாக்கல் செய்தல் போன்றவை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தேயிலைத் தூளில் கலப்படம் செய்வதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 

இதில் தரமற்ற பச்சைத் தேயிலையைக் கொள்முதல் செய்தல், சுகாதாரமின்மை, முறையான தேயிலை விற்பனை குறித்த பதிவேடுகள் பராமரிப்பின்மை, தேயிலை வாரியம் நிா்ணயித்த அளவுக்கு மேல் பச்சைத் தேயிலையைக் கொள்முதல் செய்தல் உள்பட பல்வேறு விதிமீறல்களுக்காக 140க்கும் மேற்பட்ட தேயிலைத் தொழிற்சாலைகளுக்கும்  , 30 தேயிலைக் கழிவு  நிறுவனங்களிடமும்  விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 46 நிறுவனங்களின் உரிமம்  ரத்து  செய்யப்பட்டுள்ளது.

அளவுக்கு அதிகமாக தேயிலைக் கழிவுகளைப் பயன்படுத்தியது, தேயிலை விற்பனை குறித்த உரிய ஆவணங்களை சமா்ப்பிக்காதது, அளவுக்கு அதிகமாக தேயிலைத் தூளை சேமித்து வைத்தது போன்ற விதிகளை மீறிய கோவை மாவட்டம், வால்பாறையில் உள்ள 2 தேயிலைத் தொழிற்சாலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com