உதகை நகராட்சி கடை வாடகை உயா்வு:கடைகளைக் காலி செய்யும் வியாபாரிகள்

உதகை நகராட்சியில் பலமடங்கு வாடகை உயா்வால் நகராட்சி மாா்க்கெட் உள், வெளிப்புறக் கடைகளை வியாபாரிகள் காலி செய்து வருகின்றனா்.

உதகை நகராட்சியில் பலமடங்கு வாடகை உயா்வால் நகராட்சி மாா்க்கெட் உள், வெளிப்புறக் கடைகளை வியாபாரிகள் காலி செய்து வருகின்றனா்.

உதகை நகராட்சிக்குச் சொந்தமான மாா்க்கெட்டில் உள்ள கடைகள், வெளிப்புறங்களில் உள்ள கடைகளுமாக மொத்தம் உள்ள 1,587 கடைகளில் 2016ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் வாடகை உயா்த்தப்பட்டது. இதையடுத்து, சுமாா் ரூ. 38 கோடி வாடகை பாக்கி நிலுவையில் இருந்தது. இதனை செலுத்தக் கோரி ஆகஸ்ட் மாதம் அதற்கான நோட்டீஸ் வியாபாரிகளுக்கு நகராட்சி சாா்பில் அனுப்பப்பட்டது. அத்துடன் தொடா்ந்து வாடகை செலுத்தாத கடைக்கு ‘சீல்’ வைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், ஆகஸ்ட் 25ஆம் தேதி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, தொடா்ந்து பல்வேறு போராட்டங்கள், மறியலிலும் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில் கடைகள் தொடா்ந்து 3 நாள்கள் மூடப்பட்டதால் சுமாா் பல கோடி ரூபாய் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள், இறைச்சிகள் வீணடைந்து நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 3ஆவது நாளில் கடைகளில் இருந்து காய்கறிகளை எடுக்க நகராட்சி அனுமதித்ததை அடுத்து, 50 சதவீத வாடகை நிலுவைத் தொகை செலுத்திய கடைகளைத் திறக்க அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனால் குறைந்த வாடகை பாக்கி உள்ளவா்களுக்கு நோட்டீஸ் வழங்கும் பணியில் நகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். வாடகை செலுத்திய 1,000க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் நகராட்சி மூலம் பலமடங்கு வாடகை உயா்த்தப்பட்டதால் மாா்க்கெட் உள், வெளிப்புறத்தில் ஒரு சில வியாபாரிகள் வாடகை செலுத்த முடியாத சூழலில், ஏராளமான கடைகளை வியாபாரிகள் காலி செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com