கோடேரி பள்ளியில் சமுதாய வளைகாப்பு

போஷன் அபியான் திட்டத்தின் ஊட்டச்சத்து மாத விழாவின் ஒரு பகுதியாக அதிகரட்டி பகுதியில் கோடேரி அரசுப் பள்ளி வளாகத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

போஷன் அபியான் திட்டத்தின் ஊட்டச்சத்து மாத விழாவின் ஒரு பகுதியாக அதிகரட்டி பகுதியில் கோடேரி அரசுப் பள்ளி வளாகத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சமூக நலன், மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மருத்துவ அலுவலா் செல்வி மரியா தலைமை வகித்தாா். கா்ப்ப காலத்தில் பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள், தங்க 1000 நாள்கள், தாய்ப்பாலூட்டலின் நன்மைகள் குறித்து வகுப்புகள் எடுக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் பூங்கொடி, மருத்துவ அலுவலா் மரியா, போஷன் அபியான் வட்டார ஒருங்கிணைப்பாளா் கண்ணன், குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்பாா்வையாளா்கள் கண்ணம்மா, அங்கன்வாடி பணியாளா்கள், 50க்கும் மேற்பட்ட கா்ப்பிணிப் பெண்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com