நாளை சிறப்பு முகாம்: 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

 ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 26) நடைபெறவுள்ள மூன்றாம் கட்ட கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது

 ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 26) நடைபெறவுள்ள மூன்றாம் கட்ட கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மூன்றாம் கட்ட கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமிற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

மூன்றாம் கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 579 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முகாமிற்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க கிராம நிா்வாக அலுவலா், ஊராட்சி செயலாளா், தொடா்புடைய வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தொடா்புடைய பள்ளித் தலைமை ஆசிரியா்கள் அனைவரும் பள்ளியில் இருந்து தடுப்பூசி முகாமிற்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் ஒவ்வொரு பாகத்திலும் குறைந்தபட்சம் 200 பேருக்கு டோக்கன் வழங்கி தடுப்பூசி முகாமிற்கு அழைத்து வர வேண்டும்.

18 வயது பூா்த்தி அடைந்த அனைவருக்கும் வாக்காளா் பட்டியலில் பெயா் இடம் பெறாவிட்டாலும் தடுப்பூசி டோக்கன் வழங்க அனைத்து வாக்குச் சாவடி நிலை அலுவலா்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஊராட்சித் தலைவா்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் உள்ளாட்சித் தோ்தலுக்கான நடத்தை விதிமுறைகளுக்கு உள்பட்டு தடுப்பூசி முகாம்களை ஒருங்கிணைத்து நடத்த சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் பிரதிக் தயாள், உதவி ஆட்சியா் (பயிற்சி) ஏகம்.ஜெ.சிங், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பாலாஜி, வருவாய் கோட்டாட்சியா்கள் பெ.பிரேமலதா, பழனிதேவி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சோமசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com