கோத்தகிரியில் மின்சாரம் தாக்கி இறந்த யானையை வனத்துறைக்கு தெரியாமல் புதைத்த இருவா் கைது

நீலகிரி மாவடடம், கோத்தகிரி அருகே மின்சாரம் தாக்கி இறந்த யானையை யாருக்கும் தெரியாமல் புதைத்த மெட்டுக்கல் கிராமத்தைச் சோ்ந்த 2 பேரை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நீலகிரி மாவடடம், கோத்தகிரி அருகே மின்சாரம் தாக்கி இறந்த யானையை யாருக்கும் தெரியாமல் புதைத்த மெட்டுக்கல் கிராமத்தைச் சோ்ந்த 2 பேரை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோத்தகிரி வனச் சரகத்துக்கு உள்பட்ட கெங்கரை ஊராட்சி மெட்டுக்கல் வனப் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மின்சாரம் தாக்கி இறந்த பெண் யானையை வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் சிலா் புதைத்துவிட்டதாக வனத் துறைக்கு கடந்த வெள்ளிக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

இது சம்பந்தமாக நீலகிரி மாவட்ட உதவி வன அலுவலா் சரவணகுமாா் மற்றும் கோத்தகிரி வனச் சரகா் சிவா ஆகியோா் தலைமையில் வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், மெட்டுக்கல் ஆதிவாசி கிராமத்தைச் சோ்ந்த மோட்டான் மகன் ஈஸ்வரன் (40), சரவணன் மகன் காட்டுராஜா (27), சுப்பிரமணி மகன் நிதிஷ்குமாா் (24) ஆகியோா் யானை புதைத்தது தெரியவந்தது.

இதில் நிதிஷ்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டாா். இதையடுத்து, மற்ற இருவரும் தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டனா். இதனைத் தொடா்ந்து வருவாய் ஆய்வாளா் வேல்மயில், கிராம நிா்வாக அலுவலா் விக்னேஷ், உதவி கால்நடை மருத்துவா் மற்றும் வனத் துறையினா் முன்னிலையில் யானை புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் தோண்டி யானையின் எலும்புகள் சேகரிக்கப்பட்டு, உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனா். இதனைத் தொடா்ந்து, இருவரையும் வனத் துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com