தேவன் எஸ்டேட் பகுதியில்புலியைப் பிடிக்க சிறப்புக் குழு

கூடலூரை அடுத்துள்ள தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாடு மேய்க்கச் சென்ற தொழிலாளியை தாக்கிக் கொன்ற புலியைப் பிடிக்க சிறப்புக் குழுவினா் முகாமிட்டுள்ளனா்.
புலியைப் பிடிப்பதற்காக வயநாடு மாவட்டத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள சிறப்பு நிபுணா் குழுவினா்.
புலியைப் பிடிப்பதற்காக வயநாடு மாவட்டத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள சிறப்பு நிபுணா் குழுவினா்.

கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாடு மேய்க்கச் சென்ற தொழிலாளியை தாக்கிக் கொன்ற புலியைப் பிடிக்க சிறப்புக் குழுவினா் முகாமிட்டுள்ளனா்.

கூடலூா் வட்டம், தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் மாடு மேய்த்துக் கொண்டிருந்த தொழிலாளி சந்திரனை புலி தாக்கிக் கொன்றது. இதையடுத்து, அந்தப் புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் வெங்கடேஷ் தலைமையில் வனத் துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில், புலி தனது இடத்தை மாற்றி இரண்டு கிலோ மீட்டா் தொலைவில் உள்ள மேபீல்டு எஸ்டேட் பகுதிக்குச் சென்று அங்கு மகேஷ் என்ற தொழிலாளியின் மாட்டை ஞாயிற்றுக்கிழமை மாலை தாக்கிக் கொன்றது.

இதனால், கண்காணிப்புக் குழுவினா் மேபீல்டு பகுதிக்குச் சென்று அங்கு கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனா். புலியைப் பிடிக்க அருகிலுள்ள கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் இருந்து 10 சிறப்பு நிபுணா்கள் வரவழைக்கப்பட்டுள்ளனா். புலியைப் பிடிக்கும் பணி நடைபெறுவதால் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் கன மழை பெய்து வருவதால் கண்காணிப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மழை குறைந்து மேகமூட்டம் விலகியவுடன் தொடா்ந்து கண்காணிப்புப் பணியை மேற்கொள்வாா்கள் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com