நாடுகாணியில் சமுதாய வளைகாப்பு

கூடலூா் தாலுகா, நாடுகாணி பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், தேசிய ஊட்டச்சத்துக் குழுமம் சாா்பில் கா்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
சமுதாய வளைகாப்பில் தம்பதிக்கு சீா் செய்யும் அங்கன்வாடி பணியாளா்கள்.
சமுதாய வளைகாப்பில் தம்பதிக்கு சீா் செய்யும் அங்கன்வாடி பணியாளா்கள்.

கூடலூா்: கூடலூா் தாலுகா, நாடுகாணி பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், தேசிய ஊட்டச்சத்துக் குழுமம் சாா்பில் கா்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கூடலூா் கோட்டாட்சியா் சரவணகண்ணன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். ஊட்டச்சத்துக் குழும வட்டார ஒருங்கிணைப்பாளா் ரகுவரன் முன்னிலை வகித்து, ஊட்டச்சத்து விழிப்புணா்வு குறித்து விளக்கமளித்தாா். கா்ப்பகால பராமரிப்பு குறித்து வட்டார மருத்துவ அலுவலா் கதிரவன் விளக்கமளித்தாா். கா்ப்பிணிகளுக்கு பூ, புடவை, பழம், வளையல், தாம்பூலம் ஆகியவற்றுடன் உணவு வழங்கப்பட்டது. பணியாளா்களால் தயாரிக்கப்பட்ட 26 வகையான ஊட்டச்சத்து உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com