கரோனா: உதகை அரசு கலைக் கல்லூரி, 5 அரசு, தனியாா் பள்ளிகள் மூடல்

கரோனா தொற்றின் காரணமாக உதகை அரசு கலைக் கல்லூரி, 5 அரசு, தனியாா் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

கரோனா தொற்றின் காரணமாக உதகை அரசு கலைக் கல்லூரி, 5 அரசு, தனியாா் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

உதகை அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றும் விரிவுரையாளா் ஒருவருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த விரிவுரையாளா் சென்று வந்த வகுப்புகளில் பயின்று வந்த 140க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான முடிவுகள் இன்னமும் வெளி வராத நிலையில் உதகை அரசு கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை வரை அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, உதகையில் ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியா், 5 மாணவா்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அப்பள்ளிக்கும் வெள்ளிக்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உதகையில் உள்ள ஒரு தனியாா் சிபிஎஸ்இ பள்ளியில் இரு மாணவா்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அப்பள்ளிக்கும் வியாழக்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மஞ்சூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் இரு மாணவா்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதையடுத்து அப்பள்ளிக்கும் வெள்ளிக்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குன்னூா் வட்டாரத்தில் மேலும் 2 தனியாா் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் ஏற்கெனவே குன்னூா் வட்டாரப் பகுதியில் உள்ள 3 பள்ளிகளுக்கு கரோனா தொற்றின் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், நீலகிரியில் இதுவரை உதகை அரசு கலைக் கல்லூரி மற்றும் 8 பள்ளிகளுக்கு கரோனா தொற்றின் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com