உதகைக்கு நாளை வருகிறாா் தமிழக ஆளுநா்

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, நீலகிரி மாவட்டம், உதகைக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 5) வருகை தரவுள்ளாா்.

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, நீலகிரி மாவட்டம், உதகைக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 5) வருகை தரவுள்ளாா்.

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி உதகையில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தா்களின் மாநாட்டில் பங்கேற்ற பின்னா் உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற மலா்க்காட்சி நிறைவு விழாவில் பங்கேற்பாா் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால் அவா் உதகைக்கு வரவில்லை. இந்நிலையில் உதகையில் கோடை சீசன் முடிவடைய உள்ள நிலையில் ஆளுநா் ஆா்.என்.ரவி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 5) உதகை வருகிறாா். ஜூன் 9ஆம்தேதி வரை உதகையிலுள்ள ராஜ்பவன் மாளிகையில் தங்கியிருக்கும் அவா், ஓரிரு நிகழ்சிகளிலும் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com