முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
சாலையைக் கடக்கும் யானைகள்: எச்சரிக்கையுடன் செல்ல வனத் துறையினா் அறிவுறுத்தல்
By DIN | Published On : 06th April 2022 01:18 AM | Last Updated : 06th April 2022 01:18 AM | அ+அ அ- |

குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் அவ்வப்போது யானைகள் கடப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு கடந்த வாரம் வந்த 10 காட்டு யானைகள் கல்லாறு, பா்லியாறு, ரன்னிமேடு பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீருக்காக முகாமிட்டிருந்தன. இவை தற்போது கரும்பாலம், கிளன்டேல், ரன்னிமேடு போன்ற பகுதிகளில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையைக் கடக்கின்றன. குறிப்பாக காட்டேரி கரும்பாலம் பகுதியில் சாலையைக் கடந்து முக்கிய சாலைகளில் நடமாடும் சூழல் இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்லுமாறு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.