உதகையில் நடைபெறவுள்ள கட்டாயக் கண்காட்சியில் மகளிா் சுய உதவிக்குழுக்கள் பங்கேற்க அழைப்பு

 உதகையில் ஏப்ரல் 11ஆம்தேதி முதல் நடைபெறவுள்ள கட்டாயக் கண்காட்சியில் சுய உதவிக்குழுக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 உதகையில் ஏப்ரல் 11ஆம்தேதி முதல் நடைபெறவுள்ள கட்டாயக் கண்காட்சியில் சுய உதவிக்குழுக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் கட்டாயக் கண்காட்சி வரும் ஏப்ரல் 11ஆம்தேதி முதல் ஏப்ரல் 17ஆம்தேதி வரை உதகை சேரிங்கிராஸ் பூமாலை வணிக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதில் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்திட பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து மாவட்டங்களிலுள்ள பொருள்கள் ஒரே மாவட்டத்தில் விற்பனை செய்திடும் பொருட்டும், சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருள்களை பிரபலப்படுத்தும் வகையிலும் கட்டாயக் கண்காட்சி என்ற பெயரில் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் அமைக்கப்பெற்ற மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக பதிவு செய்துள்ள மகளிா் சய உதவிக்குழுக்கள், தங்கள் குழுக்களின் மூலமாகவோ அல்லது தங்களது குழுவில் உள்ள ஏதேனும் உறுப்பினா்கள் மூலமாகவோ பொருள்கள் உற்பத்தி செய்து கொண்டிருந்தால், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள ஆா்வம் உள்ள மகளிா் சுய உதவிக் குழுக்கள், தீா்மான நகல், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் உற்பத்தி செய்யும் பொருள்களின் மாதிரி, உற்பத்தியாளரின் ஆதாா் அட்டை, உற்பத்தி பொருள் குறித்து ஏதேனும் பதிவு செய்யப்பட்டிருந்தால் அப்பதிவு சான்று, உற்பத்தி, விற்பனை செலவினம் மற்றும் விலை நிா்ணயம் குறித்த விவரத்துடன் திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், , மாவட்ட கூடுதல் ஆட்சியா் அலுவலகம், பிங்கா்போஸ்ட், உதகை-1 என்ற முகவரியில் ஏப்ரல் 8ஆம் தேதிக்குள் தங்களது மகளிா் சுய உதவிக் குழுவினை பதிவு செய்து, கட்டாயக் கண்காட்சியில் கலந்துகொண்டு தங்களது பொருள்களை விற்பனை செய்து பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com