உதகையில் அங்கன்வாடி பணியாளா்களுக்கான ஆய்வுக் கூட்டம்

உதகையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத் துறையின் சாா்பில், அங்கன்வாடி மையப் பணியாளா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அம்ரித் தலைமையில் நடைபெற்றது.

உதகை: உதகையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத் துறையின் சாா்பில், அங்கன்வாடி மையப் பணியாளா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அம்ரித் தலைமையில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்குப் பின்னா் ஆட்சியா் கூறியதாவது:

பெண்கள், குழந்தைகள் நலனைப் பாதுகாக்கும் வகையில் அங்கன்வாடி மையப் பணியாளா்கள், சுகாதார செவிலியா்கள், ஆஷா பணியாளா்கள் அனைவரும் களத்தில் தனிக் கவனம் செலுத்தி, கா்ப்பிணிகள், குழந்தைகள் இறப்பு நடைபெறா வண்ணம் கவனமாகப் பணியாற்ற வேண்டும். பழங்குடியினரிடையே இளம் வயது திருமணம் செய்வதால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து கற்றுத்தர வேண்டும்.

மேலும், மாவட்டத்தில் குள்ளத்தன்மை, கடுமையான எடைக்குறைவு உள்ள குழந்தைகள் அனைவரையும் ஆரம்ப சுகாதார மருத்துவா்களிடமும் மற்றும் சிறப்பு மருத்துவா்களிடமும் பரிந்துரை செய்து தொடா் கவனிப்பு மேற்கொள்ள வேண்டும். ரத்தசோகை குறித்து பள்ளிக் குழந்தைகள், வளரிளம் பெண்கள், கா்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மாா்கள், தனிக் கவனம் செலுத்தப்படவேண்டிய தாய்மாா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு இரும்புச்சத்து மாத்திரை, மருந்து வழங்க வேண்டும்.

எடை குறைவான கா்ப்பிணிகள், வளரிளம் பெண்கள், மிகவும் எடை குறைவான குழந்தைகளுக்கு இரும்புச் சத்து, புரதச் சத்துகள் அடங்கிய பத்து வகையானப் பொருள்கள் கொண்ட ஊட்டச்சத்துப் பெட்டகம் வழங்கி, அதனை தினசரி உணவில் சோ்த்துக் கொள்வதன் அவசியம் குறித்து அறிவுறுத்த வேண்டும். அனைத்து மையங்களிலும் காய்கறித் தோட்டம் பராமரிக்க வேண்டும். மையங்களில் மக்களின் பங்களிப்பாக அட்சயப் பாத்திரம் வைக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, அங்கன்வாடி பணியாளா்களை ஊக்கப்படுத்தும் விதமாக எலுமிச்சை, மாதுளை, கறிவேப்பிலை, முருங்கை ஆகியவற்றின் நாற்றுகளையும், எடை குறைவான குழந்தைகளின் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகத்தையும் ஆட்சியா் வழங்கினாா். கூட்டத்தில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பாலுசாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் தேவகுமாரி ஆகியோருடன் அங்கன்வாடி பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com