‘தொகுப்பூதிய ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை’

தொகுப்பூதியம் பெறும் பகுதி நேர சிறப்பு ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து ஆசிரியா் முன்னேற்ற பேரவை மாநிலத் தலைவா் பா.ஆரோக்கிய தாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

தொகுப்பூதியம் பெறும் பகுதி நேர சிறப்பு ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து ஆசிரியா் முன்னேற்ற பேரவை மாநிலத் தலைவா் பா.ஆரோக்கிய தாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து தமிழக முதல்வருக்கு அவா் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

தொகுப்பூதியத்தில் பகுதி நேர சிறப்பு ஆசிரியா்களாக சுமாா் 16,549 போ் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பதிவு மூப்பு மற்றும் இனவாரி சுழற்சி அடிப்படையில் கடந்த 2012ஆம் ஆண்டு தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்கள் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் குழந்தைகள் கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2009இன் படி 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஓவியம், இசை, தையல் மற்றும் உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பு பாடங்களை கற்பிக்க நியமிக்கப்பட்டனா். இவா்களில் சுமாா் 12,000 போ் தற்போது 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்துள்ளனா்.

இந்த பகுதி நேர சிறப்பாசிரியா்கள் மாத தொகுப்பூதியமாக தற்போது ரூ. 10,000 பெறுகின்றனா். இந்நிலையில் கடந்த 2021 சட்டப் பேரவை பொதுத் தோ்தலின்போது திமுக அளித்த தோ்தல் அறிக்கையின் படி பள்ளிக் கல்வித் துறையில் மாத தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பகுதி நேர சிறப்பு ஆசிரியா்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மேலும், அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்புகள் வரை 100 மாணவா்களுக்கு மேல் உள்ள பள்ளிகளில் மட்டுமே சிறப்பு ஆசிரியா்கள் நியமனம் என்ற விதியை தளா்த்தி, சுமாா் 1,300 நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் தலா ஒரு சிறப்பு ஆசிரியா் பணியிடம் ஏற்படுத்த வேண்டும்.

கடந்த 2003 ஜூலையில் தமிழ்நாடு அரசு ஊழியா்களின் போராட்டத்தின்போது ரூ. 4000 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியா்கள், பின்னா் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் சிறப்பு தோ்வு நடத்தி பணி நிரந்தரம் செய்யப்பட்டதைப்போல, தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்வு நடத்தி சிறப்பு ஆசிரியா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com