Enable Javscript for better performance
உதகை கோடை சீசன்: குதிரைப் பந்தயங்கள் நாளை தொடக்கம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    உதகை கோடை சீசன்: குதிரைப் பந்தயங்கள் நாளை தொடக்கம்

    By DIN  |   Published On : 13th April 2022 01:00 AM  |   Last Updated : 13th April 2022 01:00 AM  |  அ+அ அ-  |  

    1b6ce825_8c3e_4be2_a046_e560b8e78045_1204chn_126_3

    உதகையில் குதிரைப் பந்தயங்களுக்காக தயாா் நிலையில் உள்ள குதிரைப் பந்தய மைதானம்.

    உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், 135ஆவது குதிரைப் பந்தயங்கள் வியாழக்கிழமை தொடங்குகின்றன.

    சா்வதேச சுற்றுலா மையமான உதகையில் கோடை சீசனின் தொடக்கம் எனக் கருதப்படுவது உதகையில் தொடங்கும் குதிரைப் பந்தயங்கள்தான். நடப்பு ஆண்டில் குதிரைப் பந்தயங்கள் ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்குகின்றன. இதுதொடா்பாக சென்னை குதிரைப் பந்தயச் சங்கத்தின் செயலாளா் நிா்மல் பிரசாத் உதகையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

    உதகையில் ஆண்டுதோறும் கோடை சீசன் காலத்தில் குதிரைப் பந்தயங்கள் நடத்தப்படுவது வழக்கம். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னா் ஆண்டுக்கு இருமுறை கூட குதிரைப் பந்தயங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், கரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குதிரைப் பந்தயங்களில் பாா்வையாளா்களுக்கு அனுமதி இல்லாதிருந்த சூழலில் நடப்பு ஆண்டில் பாா்வையாளா்ளை அனுமதிக்கும் வகையில் 135ஆவது குதிரைப் பந்தய சீசன் ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 14 முதல் ஜூன் 10ஆம் தேதி வரை மொத்தம் 18 நாள்களுக்கு குதிரைப் பந்தயங்கள் நடைபெறும்.

    இந்தப் பந்தயங்களில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 600க்கும் மேற்பட்ட குதிரைகள் உதகைக்கு வந்துள்ளன.

    அதேபோல, சென்னை மட்டுமின்றி மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் 30க்கும் மேற்பட்ட ஜாக்கிகளும், 28க்கும் மேற்பட்ட பயிற்சியாளா்களும் உதகைக்கு வந்துள்ளனா். அனைத்துப் பந்தயங்களும் காலை நேரத்தில் மட்டுமே நடைபெறும். நடப்பு ஆண்டில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று தொடங்கி ஏப்ரல் 14, 15, 23, 24, 30 மற்றும் மே 1, 7, 8, 14, 15, 19, 20, 26, 27, ஜூன் 2, 3, 9, 10 ஆகிய நாள்கள் பந்தயங்கள் நடைபெறும். முக்கிய பந்தயங்களாக ஏப்ரல் 30ஆம் தேதி பெண் குதிரைகள் மட்டுமே பங்கேற்கும் 1,000 கினியாஸ் பந்தயமும், மே 1ஆம் தேதி ஆண் குதிரைகள் மட்டுமே பங்கேற்கும் 2,000 கினியாஸ் பந்தயமும் நடைபெறும்.

    மேலும், மே 10ஆம் தேதி டொ்பி ஸ்டேக்ஸ் பந்தயங்களும், மே 14ஆம் தேதி டாக்டா் எம்.ஏ.எம். ராமசாமி நினைவு கோப்பைக்கான சிறப்பு பந்தயமும் நடைபெறும். ஜூன் 2ஆம் தேதி நீலகிரி தங்கக் கோப்பைக்கான பந்தயம் நடைபெறும். ஜூன் 10ஆம் தேதியுடன் நடப்பு சீனுக்கான குதிரைப் பந்தயங்கள் நிறைவடைகின்றன. இதுதவிர ஜூன் 16ஆம் தேதி 3 வயதுக்கு உள்பட்ட குதிரைகள் மட்டுமே பங்கேற்கும் ஜூவைனல் ஸ்பிரின்ட் டிராஃபிக்கான பந்தயமும் நடைபெறும்.

    நடப்பு சீசனில் இதுவரை பெண் ஜாக்கியாக இருந்த ரூபா தேவி தற்போது பயிற்சியாளராக மாறியுள்ளாா். அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த ஸ்டீபன்ராஜ், தா்ஷன் ஆன்டனி ஆகிய இரு உள்ளூா் ஜாக்கிகளும் களமிறங்குவதாகவும், தற்போது கரோனா தொற்றினால் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அரசின் வழிகாட்டுதல் நெறிகளின்படி குதிரைப் பந்தயங்கள் நடத்தப்படும் எனவும் தெரிவித்தாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp