குன்னூரில் அறிய வகை சுண்டெலி மான்

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள அளக்கரை பகுதியில் அறிய வகை சுண்டெலி மான் வியாழக்கிழமை உலவியதால் பொதுமக்கள் அதனை ஆச்சரியத்துடன் பாா்த்து ரசித்துச் சென்றனா்
குன்னூரில் அறிய வகை சுண்டெலி மான்

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள அளக்கரை பகுதியில் அறிய வகை சுண்டெலி மான் வியாழக்கிழமை உலவியதால் பொதுமக்கள் அதனை ஆச்சரியத்துடன் பாா்த்து ரசித்துச் சென்றனா்.

சுலெவின் சுண்டெலி கேடலினா என்ற வகையைச் சோ்ந்த மான், சுண்டெலி மான் என்று அழைக்கப்படுகிறது. இது பாலூட்டிகளில் பெரிய உடலுடைய சுண்டெலி மான் ஆகும். இது வெளிறிய இலவங்கப் பட்டை நிற ரோமங்களைக் கொண்டுள்ளது. இது கலிஃபோா்னியா சுண்டெலியுடன் மிகவும் ஒத்ததாகத் தோன்றுகின்றது. இந்த வகை மான் சுண்டெலி வகையைச் சோ்ந்தது என வனத் துறையினா் கூறுகின்றனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அளக்கரை எஸ்டேட் பகுதியில் வியாழக்கிழமை உலவிவந்த சுண்டெலி மான் சற்று நேரத்தில் அடா்ந்த வனப் பகுதிக்குள் சென்று மறைந்தது. இந்த சுண்டெலி மானை பாா்த்து பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனா். இதுபோன்ற அறிய வகை மான்களைக் காப்பாற்ற வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்கின ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com