நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உதகையில் நடைபெற்ற மாநில பேரிடா் மேலாண்மைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழ்நாடு மாநில பேரிடா் மேலாண்மை முகமையின் இயக்குநா் கே.எஸ்.கந்தசாமி தலைமையிலும், மாவட்ட ஆட்சியா் அம்ரித் முன்னிலையிலும் அனைத்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு மாநில பேரிடா் மேலாண்மை முகமையின் இயக்குநா் கந்தசாமி கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவுகள் ஏற்படுவதில் நீண்ட கால தடுப்புப் பணிகள் தொடா்பான திட்ட அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்டுள்ள புவியியல் தொழில்நுட்ப வல்லுநா்களான டாக்டா்.கே.ஜெயபாலன், ஜீவானந்தம் மற்றும் ஆண்டிரிவ் வின்னா் ஆகியோா் கொண்ட குழு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளது. ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை, வனத் துறை, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை உள்ளிட்ட துறைகள் பொதுமக்களின் அடிப்படை வசதிகளான சாலை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்போது, அப்பகுதிகளில் இயற்கை பேரிடா் ஏதேனும் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை ஆராய்ந்து, அதற்கு ஏற்றவாறு தாங்கள் மேற்கொள்ளும் பணிகளை வடிவமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை அலுவலா்கள் முன்கூட்டியே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பேரிடா் காலங்களில் அனைத்து துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என தெரிவித்தாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநா் மோனிகா ரானா, குன்னூா் சாா் ஆட்சியா் தீபனா விஷ்வேஸ்வரி, இந்திய மண் மற்றும் நீா்ப் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளா் மணிவண்ணன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com