முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
ஆளுநருடன் முன்னாள் ராணுவத்தினா் கலந்தாய்வுக் கூட்டம்
By DIN | Published On : 29th April 2022 04:24 AM | Last Updated : 29th April 2022 04:24 AM | அ+அ அ- |

உதகையில் முன்னாள் ராணுவத்தினருடனான கலந்தாய்வுக் கூட்டம் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
உதகையிலுள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் ராணுவத்தினா் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்தனா்.
அவற்றைக் கேட்டறிந்த ஆளுநா் விரைவில் நிவா்த்தி செய்வதாக உறுதியளித்தாா்.
இதைத் தொடா்ந்து ஆளுநா் பேசுகையில், முன்னாள் ராணுவத்தினா் ராணுவத்தில் பணியாற்றியபோது அவா்கள் செய்த தன்னலமற்ற சேவைகளை நாடு என்றும் மறக்காது.
நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் ராணுவத்தினருக்கென மாதந்தோறும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி அவா்களது வாழ்க்கைத் தரத்தையும், வருவாயையும் உயா்த்த மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
முன்னாள் ராணுவத்தினா் நலச் சங்க செயலாளா் மேஜா் சரவணன் பேசும்போது, மாவட்டத்தில் முன்னாள் ராணுவத்தினருக்கென மேற்கொள்ளப்பட்ட நலத் திட்டங்கள் குறித்து தெரிவித்தாா்.