முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
உதகையில் கொட்டித் தீா்த்த ஆலங்கட்டி மழை
By DIN | Published On : 30th April 2022 12:53 AM | Last Updated : 30th April 2022 12:53 AM | அ+அ அ- |

உதகை நகரில் வெள்ளிக்கிழமை பெய்த மழையில் கொட்டிய ஆலங்கட்டிகள்.
உதகையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆலங்கட்டி மழை பெய்தது.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், கோடை சீசனை வரவேற்கும் வகையில் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் உதகை நகரம் மற்றும் புறநகா் பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்த நிலையில், அதைத் தொடா்ந்து சுமாா் ஒரு மணி நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது.
சுமாா் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு உதகையில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் ஆலங்கட்டி மழை பெய்ததால் உதகையிலிருந்த மக்கள் மட்டுமின்றி உதகைக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.