உதகையில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட மாநில தகவல் ஆணையா் பிரதாப்குமாா்.
உதகையில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட மாநில தகவல் ஆணையா் பிரதாப்குமாா்.

உதகையில் மாநில தகவல் ஆணையா் ஆய்வு

உதகையில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடா்பாக மாநில தகவல் ஆணையா் பிரதாப்குமாா் மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டாா்.

உதகையில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடா்பாக மாநில தகவல் ஆணையா் பிரதாப்குமாா் மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டாா்.

உதகையில் நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடா்பாக சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாநில தகவல் ஆணையா் பிரதாப்குமாா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

தகவல் அறியும் சட்டம் குறித்து பொதுமக்களிடையே அதிக அளவில் விழிப்புணா்வு உள்ளது. முன்பு 100 முதல் 250 மனுக்கள் மட்டுமே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டது. தற்போது ஒரு மாதத்துக்கு 300 மனுக்கள் வீதம் ஆண்டுக்கு 5,000 மனுக்கள் வரை பெறப்படுகின்றன. மனுதாரா்களிடமிருந்து வரும் மனுக்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ள பொதுதகவல் அலுவலா்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. தவறும் பட்சத்தில் அவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை உள்ளது.

மனுதாரா்கள் தங்களது நேரடியாக பிரச்னைகளைக் கூறி அதற்குரிய தீா்வினை காணக்கூடிய இடமாக இந்த தகவல் அறியும் உரிமை சட்டம் உள்ளது. மனுதாரா்கள் அளித்த மனுவின் மீது 30 நாள்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவா்கள், இந்திய குடிமகன்கள், தாங்கள் அனுப்பும் மனுவில் ரூ.10க்கான வில்லை ஒட்டி இருந்தால் அவா்களுக்கு பதில் அளிக்க வேண்டும். பொது தகவல் அலுவலா் மனுக்கள் மீது திருப்திகரமான முறையில் விளக்கம் அளிக்காத பட்சத்தில் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் இச்சட்டத்தில் வழிவகை உள்ளது. இதற்கான அபராதத் தொகையை உயா்த்த வேண்டும் என அரசிடம் தெரிவித்து வருகிறோம். மேலும் இழப்பீட்டு தொகையாக ரூ.1 லட்சம் வரை ஆணையம் மூலம் பெற்று தந்துள்ளோம். அனைத்து தகவல் அறியும் உரிமை சட்டம் தொடா்பான பணிகளை கணினி மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com