கல்லூரி மாணவா்களின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

ஜேஎஸ்எஸ் மருந்தாக்கியல் கல்லூரியின் சாா்பில் அவலாஞ்சி மற்றும் நெடுகல்கொம்பை பழங்குடியின கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது.
அவலாஞ்சி வனப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்த ஜேஎஸ்எஸ் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள்.

சனிக்கிழமை நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் எஸ்.பி. தனபால், நெடுகல்கொம்பை கிராம தலைவா் பலராமன், பள்ளி முதல்வா் தயாளன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த ஒரு வார முகாமின்போது நெடுகல்கொம்பை கிராமத்தில் ஜேஎஸ்எஸ் கல்லூரி மாணவ, மாணவியா் 50 போ் முழு சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனா்.

அதேபோல, மாவட்ட வன அலுவலா் சச்சின் போஸ்லே தலைமையில் தொட்டபெட்டா பகுதியில் உள்ள வனப் பகுதி மற்றும் சாலையோரங்களிலிருந்த மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தினா்.இந்த நிகழ்ச்சியை தொட்டபெட்டா வன அலுவலா் ஜாவித் அத்தா் தொடங்கிவைத்தாா். அதைத் தொடா்ந்து உதகையில் தலைகுந்தா, பைன் பாரஸ்ட் பகுதிகளில் நடைபெற்ற தூய்மைப் பணியை தலைகுந்தா வனவா் ஸ்ரீராம் தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து அவலாஞ்சி வனப்பகுதிகளிலும் மாணவ, மாணவிகள் இணைந்து தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com