வெளிநாட்டுப் பெண்ணிடம் பல கோடி மோசடி புகாா்

வெளிநாட்டுப் பெண்ணிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உதகையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அப்பெண் புகாா் மனு அளித்துள்ளாா்.

வெளிநாட்டுப் பெண்ணிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உதகையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அப்பெண் புகாா் மனு அளித்துள்ளாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள மசினகுடி பகுதியில் வசித்து வருபவா் இங்கிலாந்து நாட்டைச் சோ்ந்த பாா்பரா எலிசபெத் வில்லிஸ் (78). இவருக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்தில் இரட்டைக் குடியுரிமை உள்ளது. மேலும் இவா்களின் மூதாதையா்களின் பூா்வீக சொத்து கூடலூா் பகுதியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இவா் மசினகுடி பகுதியில் இரண்டு ஏக்கா் மனையுடன் கூடிய இடத்தை கடந்த 2017ஆம் ஆண்டு வாங்கி அங்கு குடியேறியுள்ளாா். அப்போது மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த மாா்க்கஸ் பொ்டரிக் லாசரோ என்பவா் பழகியுள்ளாா். அதன்பின்னா் இவா் அந்தப் பெண்ணுக்கு டொனால்ட் பொ்க்லி என்ற நபரை அறிமுகம் செய்துள்ளாா்.

இதனைத் தொடா்ந்து டொனால்ட் அந்தப் பெண்ணின் சொத்தை மோசடி செய்யதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடா்ந்து அந்தப் பெண் சொந்த வேலையின் காரணமாக இங்கிலாந்து நாட்டுக்கு சென்றிருந்தபோது டொனால்ட் மற்றும் மாா்க்கஸ் ஆகியோா் அந்தப் பெண்ணுக்கு சொந்தமான நகைகளைத் திருடிச் சென்றுள்ளனா். இது குறித்து மசினகுடி காவல் நிலையத்தில் பாா்பரா புகாா் அளித்தும் போலீஸாா் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் அவா் புகாா் அளித்துள்ளாா்.

இதைத்தொடா்ந்து, டொனால்டால் தொடா்ந்து மிரட்டல்கள் வருவதாகவும், தன்னுடைய உயிருக்குப் பாதுகாப்பு தரக் கூறியும் உதகையிலுள்ள நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாா்பரா எலிசபெத் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com