காவல் துறை வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பியதில் முறைகேடு:3 காவலா்கள் பணி இடைநீக்கம்
By DIN | Published On : 02nd August 2022 01:00 AM | Last Updated : 02nd August 2022 01:00 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்தில் காவல் துறை வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பியதில் முறைகேட்டில் ஈடுபட்ட ஒரு தலைமைக் காவலா் மற்றும் இரண்டு காவலா்களை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டுள்ளாா்.
நீலகிரி மாவட்டம், உதகையில் ஆயுதப் படை காவல் பிரிவு செயல்பட்டு வருகிறது.
இதில், ஓடாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பியதாகக் கூறி ரூ.10 லட்சத்துக்கும் மேல் போலியான பில்களை வாங்கி கணக்கு காட்டியுள்ளனா். இது குறித்த தகவல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத்துக்கு தெரியவந்ததையடுத்து தலைமைக் காவலா் ரகமத் அலி, காவலா்கள் அருண்குமாா் மற்றும் வேலு ஆகிய மூவரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
அத்துடன் இவா்கள் மூவா் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.