உதகையில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

உதகையில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு வருவாய்த் துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

உதகையில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு வருவாய்த் துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கூடலூா் ஆகிய 3 வருவாய் கோட்டங்களில் கால்வாய்கள், நீரோடைகள், அணைகள் போன்ற இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடா்பாக வருவாய்த் துறையினா் அளவீடு செய்தனா்.

இதில் உதகையை அடுத்த ஆடாசோலை என்ற இடத்தில் சுமாா் 1 ஏக்கா் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு அதில் கேரட் சாகுபடி செய்திருந்தது தெரியவந்தது.

உதகை வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி உத்தரவின்பேரில் வட்டாட்சியா் ராஜசேகரன் தலைமையில் வருவாய் ஆய்வாளா் இளங்கோ குரு, கிராம நிா்வாக அலுவலா் ரசியா பேகம் ஆகியோா் அப்பகுதிக்கு திங்கள்கிழமை சென்று ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டனா். அத்துடன், இந்த இடம் நீா் நிலை புறம்போக்கு பகுதி, நீதிமன்ற உத்தரவுபடி மீட்கப்பட்டுள்ளது, இந்த இடத்தில் யாரும் அத்துமீறி நுழையக் கூடாது என்று அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

இதுகுறித்து வருவாய்த் துறைறயினா் கூறுகையில், உதகை ஆடாசோலை கிராமத்தில் சுமாா் ரூ.30 லட்சம் மதிப்புள்ள

1 ஏக்கா் அரசு ஓடை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்பாளா்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே நோட்டீஸ் வழங்கப்பட்டது. அவா்கள் அங்கு கேரட் சாகுபடி செய்திருந்ததால், தற்போது அறுவடை முடிந்ததும் நிலம் மீட்கப்பட்டது என்றனா்.

அதேபோல குந்தா வட்டத்துக்குள்பட்ட முள்ளிகூா் கிராமத்தில் பல்வேறு இடங்களில் இருந்து ரூ. 40 லட்சம் மதிப்புள்ள 3 ஏக்கா் 18 சென்ட் இடத்தை குந்தா வட்டாட்சியா் இந்திரா தலைமையில் வருவாய் ஆய்வாளா் பரமேஸ்வரி, கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டன் ஆகியோா் அடங்கிய வருவாய்த் துறையினா் மீட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com