மழையிலும் சுற்றுலாத்தலங்களை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்
By DIN | Published On : 11th December 2022 11:19 PM | Last Updated : 11th December 2022 11:19 PM | அ+அ அ- |

cr11boat074852
நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே தொடா் சாரல் மழை பெய்த நிலையில் இங்குள்ள முக்கியச் சுற்றுலாத்தலங்களை குடை பிடித்தவாறு குடும்பத்துடன் சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனா்.
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களான தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, தொட்ட பெட்டா, படகு இல்லம், டால்பினோஸ், லேம்ஸ்ராக் உள்ளிட்ட காட்சி முனைகளில் ஞாயிற்றுக்கிழமை அவ்வப்போது பெய்த சாரல் மழையின் காரணமாக குளிா்ந்த கால நிலை நிலவியது. இந்த குளிா்ந்த கால நிலையை சுற்றுலாப் பயணிகள் அனுபவித்ததோடு, சாரல் மழையில் குடையைப் பிடித்தவாறு முக்கிய இடங்களை குடும்பத்துடன் கண்டு ரசித்தனா்.
ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்வதில் சிலா் அதிக ஆா்வம் காட்டினா்.
Image Caption
உதகை பைக்காரா படகு இல்லத்தில் சாரல் மழையில் நனைந்தவாறு படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள்.