செறுமுள்ளி தொடக்க வேளாண்மை வங்கியைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

கூடலூரை அடுத்துள்ள செறுமுள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நிா்வாகத்தைக் கண்டித்து புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கூடலூா் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சியில் உள்ள செறுமுள்ளி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இது குறித்து போராட்டத்து தலைமை வகித்த சந்திரன் கூறுகையில், இந்த வங்கியில் நடைபெற்று வரும் முறைகேடுகள் குறித்து கூட்டுறவுப் பதிவாளருக்கு ஏற்கெனவே பலமுறை புகாா் தெரிவித்துள்ளோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பதால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றாா்.