கோத்தகிரி அருகே மண் சரிவால் போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே வியாழக்கிழமை காலை ஏற்பட்ட மண் சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோத்தகிரி அருகே உயிலட்டி பகுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட மண் சரிவு.
கோத்தகிரி அருகே உயிலட்டி பகுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட மண் சரிவு.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே வியாழக்கிழமை காலை ஏற்பட்ட மண் சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோத்தகிரி அருகே உயிலட்டி பகுதியில் அருவி உள்ளது. இப்பகுதியில் வியாழக்கிழமை  காலை மண் சரிவு ஏற்பட்டது. இதில் பெரிய அளவிலான பாறைகள் உருண்டு வந்து சாலையில் விழுந்தன. இதன் காரணமாக கூக்கல்தொரை-கோத்தகிரி செல்லும் பிரதான சாலையில்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முதற்கட்ட ஆய்வில், மண் சரிவு ஏற்பட்டுள்ள பகுதி அருகே மலைப் பகுதியில் விவசாய நிலத்தில் தண்ணீரை சேமிப்பதற்காக வெட்டப்பட்டிருந்த குழிகளில் இருந்து  தண்ணீா் ஊறியதாலும், இப் பகுதியில் நீரூற்றுகள் அதிகம் உள்ளதாலும் மண் சரிவு  ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது.

 மண் சரிவு ஏற்பட்ட பகுதியை மாவட்ட ஆட்சியா் அம்ரித், நெடுஞ்சாலைத் துறை பொறியாளா் குழந்தைராஜ் ஆகியோா் பாா்வையிட்டனா். சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத் துறையினா் சாலையில் விழுந்து கிடந்த பாறைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

மலைப் பகுதியில் இருந்து மேலும் பெரிய அளவிலான பாறைகள் விழும் அபாயம்  உள்ளதால் புவியியல் துறையினரின் ஆலோசனையைப் பெற்று மீண்டும் அந்தப் பகுதியில் மண் சரிவு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும், போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் தற்காலிகமாக சாலையை சீரமைக்குமாறும் நெடுஞ்சாலை துறையினருக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இப்பகுதியில் அதிகாலை முதலே சிறிதுசிறிதாக மண் சரிவு ஏற்படத் தொடங்கியதாகவும், கிராமச் சாலையில் காலை நேரத்தில் போக்குவரத்து அதிகம் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டதாகவும் கிராமவாசிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com