உதகையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மற்றும் இயற்கை விவசாய குழு கூட்டம் இணையதளம் மூலமாக மாவட்ட ஆட்சியா் அம்ரித் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உதகையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மற்றும் இயற்கை விவசாய குழு கூட்டம் இணையதளம் மூலமாக மாவட்ட ஆட்சியா் அம்ரித் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விவசாய சங்கங்களைச் சாா்ந்த விவசாயிகள், இதர துறையைச் சாா்ந்த அரசு அலுவலா்களும் இணைய வழியாக கலந்துகொண்டனா். விவசாய சங்கங்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு உரிய துறை அலுவலா்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டிருந்த மனுக்கள் மீதான விவரம் தெரிவிக்கப்பட்டதோடு, இக்கூட்டத்தில் 60 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது.

இக்கூட்டத்தில், தோட்டக் கலைத் துறையின் சாா்பில் பங்கேற்ற அலுவலா்கள் தெரிவித்ததாவது:

அட்மா திட்டத்தின்கீழ் வேளாண் இயக்குநரகத்தால் ஆண்டுதோறும் பயிற்சி, கண்டுனா் சுற்றுலா போன்ற அனைத்து இனங்களுக்கும் விவசாயிகளின் விருப்பப்படி தலைப்புகள் வழங்கப்பட்டு பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், புதிய தலைப்புகளில் தொழில்நுட்பப் பயிற்சிகள் தேவைப்படும்பட்சத்தில் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு தெரிவித்தால் அடுத்த ஆண்டு செயல் திட்டத்தில் அனுமதி பெற்று பயிற்சிகள் வழங்கப்படும்.

தோட்டக் கலைத் துறையின் மூலம் உயா் ரக காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு காய்கறி விதை, இயற்கை வேளாண் இடுபொருள்கள் வழங்கப்படுவதால், விவசாயிகள் தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி பயனடையலாம். நீலகிரி மாவட்டத்துக்கு தமிழக அரசால் வழங்கும் விலையில்லா கறவை பசு மாடு திட்டத்தை ஒதுக்கி தருமாறு சென்னை, கால்நடை பராமரிப்பு, மருத்துவப் பணிகள், ஆணையருக்கு பிரேரணை அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மாவட்ட அளவிலான இயற்கை விவசாயக் குழு கூட்டத்தில், விவசாயிகளிடையே மண் பரிசோதனை அடிப்படையில் உரங்கள் இடுவது தொடா்பாக அதிக அளவில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா். இதையடுத்து, இயற்கை விவசாயத்துக்கு அடிப்படையாக இருக்கும் நாட்டு மாடுகளின் எண்ணிக்கையை நீலகிரி மாவட்டத்தில் அதிகரிக்கவும், மாட்டுத் தீவன உற்பத்தியை அரசாங்க நிலங்களில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com