தோட்டக்கலைப் பண்ணையில் பேரிக்காய் ஜாம் தயாரிக்கும் பணி தீவிரம்

குன்னூரில் உள்ள தோட்டக்கலைத் துறை பண்ணையில் இரண்டாம் சீசனுக்காக பேரிக்காய் ஜாம் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

குன்னூரில் உள்ள தோட்டக்கலைத் துறை பண்ணையில் இரண்டாம் சீசனுக்காக பேரிக்காய் ஜாம் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது பேரிக்காய் சீசன் நிலவி வருகிறது. விவசாயிகள் இதனை ஊடுபயிராகவும், தனியாகவும் பயிரிட்டு மகசூல் எடுத்து வருகின்றனா். அரசு தோட்டக்கலைத் துறையின் கீழ் உள்ள குன்னூா் சிம்ஸ் பூங்கா பழப் பண்ணையில் பேரிக்காய், பிளம்ஸ், பீச் உள்பட பல்வேறு வகையான பழ மரங்கள் உள்ளன. தற்போது பேரிக்காய்கள்   அதிக அளவு  விளைந்துள்ளன.

இதனைத் தொடா்ந்து முதற்கட்டமாக  ஒரு டன் அளவிலான பேரிக்காயை கொண்டு ஜாம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில் தோட்டக்கலைத் துறை ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். இப்பணி முடிந்து தோட்டக்­கலைக்கு சொந்தமான விற்பனைக் கூடங்களுக்கு ஜாம் விற்பனைக்கு   அனுப்பப்படும்.  ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் நடைபெறும்  இரண்டாம் சீசனுக்கு நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானவா்கள்  பேரிக்காய் ஜாமை அதிக அளவு  வாங்கி செல்வாா்கள் என்று  பூங்கா நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com