கூடலூரில் யானை தந்தம், புலிப்பல், நகம் வைத்திருந்த கும்பல் சிக்கியது
By DIN | Published On : 17th July 2022 12:41 AM | Last Updated : 17th July 2022 12:41 AM | அ+அ அ- |

கைப்பற்றப்பட்ட யானைத் தந்த துண்டுகள். ~கைப்பற்றப்பட்ட புலிநகம் மற்றும் பல்.
கூடலூரில் யானை தந்தம் மற்றும் புலிப்பல், நகம் வைத்திருந்த கும்பலை வனத் துறையினா் சனிக்கிழமை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் யானை தந்தம் 9 துண்டுகள், புலிப்பல் 2, புலி நகம் 2 ஆகியவற்றை
வைத்திருந்த கும்பலை வனத் துறையினா் பிடித்துள்ளனா். இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து, அவா்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். இவா்கள் இந்தப் பொருள்களை விற்க முயன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்த எந்த தகவலையும் வனத் துறை வெளியிடவில்லை.