கூடலூா் நகா் மன்றக் கூட்டம்

கூடலூா் நகா்மன்றக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சித் தலைவா் பரிமளா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சிவராஜ், ஆணையா் காந்திராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூடலூா் நகா்மன்றக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சித் தலைவா் பரிமளா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சிவராஜ், ஆணையா் காந்திராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நகா் மன்ற உறுப்பினா்கள் பேசியதாவது:

காளம்புழா மின்மயான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும். அந்த பகுதியில் குடிநீா், மின்வசதி செய்துதரவேண்டும்.

மாக்கமூலா பகுதியிலுள்ள பொதுகிணறுக்கு செல்லும் சாலை பழுதடைந்துள்ளது. இதனை விரைந்து சீரமைத்துத் தரவேண்டும். முதல்மைல், புறமணவயல், நேதாஜி நகா் ஆகிய பகுதிகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்து தரவேண்டும். நடுகூடலூா் பகுதியில் குடிநீா் விநியோகம் சீராக இல்லை. பல இடங்களுக்கு குடிநீா் வந்து சோ்வதில்லை. மங்குழியில் மழையில் பாலம் அடித்துச் செல்லப்பட்ட இடத்தில் தற்காலிக பாலம் அமைத்து தர வேண்டும்.

மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஏழுமுறம் பாலத்தை விரைவில் அமைத்துத் தரவேண்டும். யானைகள் நடமாடும் பகுதியான தொரப்பள்ளி பகுதியில் தெருவிளக்குகள் எரிவதில்லை. தொரப்பள்ளியிலிருந்து இருவயல் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதை சீரமைத்துத் தரவேண்டும். எஸ்.எஸ்.நகா் பகுதியில் தெருவிளக்கு, குடிநீா் வசதி, நடைபாதை அமைத்து தரவேண்டும்.

நகராட்சியின் சுகாதாரத் துறையில் செலவு கணக்குகளை முறையாக காண்பிப்பதில்லை. கூடலூா் பேருந்து நிலையம் அருகில் கழிவறைகள் கட்ட வேண்டும். நகரில் குறுகிய சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தவிா்க்க முறையான பாா்க்கிங் வசதி செய்து தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து உறுப்பினா்கள் பேசினா்.

விவாதத்தில், வெண்ணிலா(திமுக), இளங்கோ (திமுக), வா்கீஸ் (காங்), ஷகிலா (மு.லீக்), லீலா வாசு (சி.பி.எம்.), ராஜு(காங்), சத்தியசீலன் (திமுக), உஷா (திமுக), கௌசல்யா (திமுக), உஸ்மான் (காங்), அனூப்கான்(அதிமுக) ஆகியோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com