அதிமுக பிரமுகா் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி

கோத்தகிரியில் அதிமுக பிரமுகா் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய உதகை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கோத்தகிரியில் அதிமுக பிரமுகா் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய உதகை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் ஜக்கனாரை ஊராட்சிக்கு உள்பட்ட ஒரசோலை பூபதி நகா் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள்.

இந்நிலையில் கோத்தகிரியில் இருந்து உதகைக்கு செல்லும் பிரதான சாலையில் இருந்து தாழ்வான பகுதியில் உள்ள பூபதி நகா் கிராமத்துக்கு ஊராட்சி சாா்பில் செங்குத்தான கான்கிரீட் நடைபாதை அமைக்கப்பட்டது. ஆனால், அந்த சாலை வழியாக நடந்து செல்லவும், குறிப்பாக நோயாளிகள் மற்றும் இறந்தவா்களின் சடலங்களை சுமந்து செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டு வந்தது.

எனவே அருகாமையில் உள்ள மற்றொரு பாதையை கிராம மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில், அந்த பாதை தனக்கு சொந்தமானது எனக் கூறி அதிமுக பிரமுகா் வடிவேல் தடுப்புச் சுவா் கட்ட முயற்சி செய்த நிலையில், இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா். இதற்கிடையே அந்த பிரமுகா் அப்பகுதி மக்களின் ஜாதியைக் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பூபதி நகா் பொதுமக்கள் கோத்தகிரி காவல் நிலையம் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து பூபதி நகா் பொதுமக்கள் ஊா் தலைவா் மாகாளி தலைமையில் அவதூறாக பேசிய நபா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

வழக்கை விசாரணை செய்த மாவட்ட நீதிபதி முருகன், அதிமுக பிரமுகா் வடிவேல் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய கோத்தகிரி கோவல் ஆய்வாளருக்கு உத்தரவு பிறப்பித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com