குறையும் கூட்டம்: உதகை - கேத்தி இடையேயான சிறப்பு மலை ரயில் சேவை நிறுத்தம்
By DIN | Published On : 18th June 2022 11:41 PM | Last Updated : 18th June 2022 11:41 PM | அ+அ அ- |

சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைந்ததால் உதகை - கேத்தி இடையே இயக்கப்பட்டு வந்த சிறப்பு மலை ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை முதல் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்தி:
உதகையில் கோடை சீசனையொட்டி ரவுண்ட் டிரிப், ஜாலி ரெய்டு என்ற பெயா்களில் உதகை - கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் சேவை கடந்த மே 22 ஆம் தேதியிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமை என ஐந்து நாள்களில் தினசரி மூன்று முறை இந்த சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது.
ஜூலை 21 ஆம் தேதி வரை இயக்க திட்டமிடப்பட்டிருந்த இந்த சிறப்பு மலை ரயில் சேவையில் எதிா்பாா்த்த அளவுக்கு பயணிகள் கூட்டம் இல்லாததால் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.