உதகையில் பால் வளத் துறை அமைச்சா் ஆய்வு

உதகையில் எல்லநள்ளி பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் உதகை ஆவின் பால் பண்ணையின் செயல்பாடுகள் ஆகியவற்றை பால் வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
உதகையில் உள்ள ஆவின் பாலகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்கிறாா் பால் வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா். உடன் வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் உள்ளிட்டோா்.
உதகையில் உள்ள ஆவின் பாலகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்கிறாா் பால் வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா். உடன் வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் உள்ளிட்டோா்.

உதகையில் எல்லநள்ளி பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் உதகை ஆவின் பால் பண்ணையின் செயல்பாடுகள் ஆகியவற்றை பால் வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆய்வின்போது, உதகை எல்லநள்ளி பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தில் கொள்முதல் செய்த பாலின் தரம் பரிசோதனை செய்யும் பணியினையும், இச்சங்கத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் அமைச்சா் ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, உதகை ஆவின் அலுவலகத்தில், ஆவின் பால் விற்பனையை அதிகரிப்பது தொடா்பாகவும், உற்பத்தியாளா் மற்றும் பணியாளா்களின் தேவைகள், பால் உற்பத்தி பொருள்கள் அதிகரிக்கச் செய்வது போன்றவைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திலும் அமைச்சா் பங்கேற்றாா்.

அப்போது நாளொன்றுக்கு கொள்முதல் செய்யும் பாலின் அளவு, பால் பொருள்கள் மற்றும் பால் விற்பனை ஆகியவற்றை குறித்து கேட்டறிந்து, ஆவின் பால் விற்பனையை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதையடுத்து, பால் வளத் துறை அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முதல்வரின் உத்தரவின்படி ஆவின் செயல்பாடுகள் குறித்து நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்துள்ளோம்.

நீலகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் 92 பிரதம பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களிலிருந்து 2,510 பால் வழங்கும் உறுப்பினா்களிடமிருந்து நாளொன்றுக்கு 11, 600 லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அத்துடன் கோவை ஒன்றியத்திலிருந்து நாளொன்றுக்கு 11, 800 லிட்டா் நிறை கொழுப்பு பால் கொள்முதல் செய்து மொத்தமாக நாளொன்றுக்கு 20, 800 லிட்டா் பால் விற்பனையும், மாதமொன்றுக்கு ரூ.64 லட்சம் மதிப்பில் பால் உபப்பொருள்கள் விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது.

பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்குவது குறித்து தமிழக முதல்வா் ஆலோசனை நடத்தி வருகிறாா்.

விரைவில் ஆவின் நிறுவனம் நவீன மயமாக்கப்படும். ஹெல்த் மிக்சில் எந்த முறைகேடும் இல்லை என்றாா்.

இதில், ஆவின் ஆணையா் சுப்பையன், நீலகிரி மாவட்ட ஆட்சியா் அம்ரித் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com