அதிகரட்டி பேரூராட்சி மன்றக் கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அதிகரட்டி பேரூராட்சியை ஊராட்சியாக மாற்ற வேண்டும் என்ற தீா்மானம் மன்றக் கூட்டத்தில் தோல்வியடைந்தது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அதிகரட்டி பேரூராட்சியை ஊராட்சியாக மாற்ற வேண்டும் என்ற தீா்மானம் மன்றக் கூட்டத்தில் தோல்வியடைந்தது.

நீலகிரி மாவட்டத்தில்11 பேரூராட்சிகள் உள்ளன. அவற்றில் 9 பேரூராட்சிகள் மலைவாழ் மக்கள், தேயிலை மற்றும் விவசாய கூலிகள், சிறு, குறு விவசாயிகள் வாழும் மலைக்கிராமங்கள், சிற்றூா்கள் நிறைந்ததாகும். பஞ்சாயத்து ராஜ் திட்டத்தின்கீழ் கிராம முன்னேற்றத்துக்காக மத்திய அரசு நேரடியாக வழங்கும் ஊரகவேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம்,பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம், ஜல்ஜீவன் குடிநீா் திட்டம் உள்ளிட்ட எந்த திட்டமும் பேரூராட்சிகளுக்கு இல்லை. மேலும் சொத்து வரி, தொழில் வரி போன்றவையும் அதிகம். எனவே, நீலகிரி மாவட்டத்தில் பல பேரூராட்சிகளை ஊராட்சிகளாக மாற்றவேண்டும் என்று கோரிக்கை வலுத்து வந்தது.

இந்த நிலையில், அதிகரட்டி பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் மு.பேபி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், 18 வாா்டுகளைக்கொண்ட அதிகரட்டி பேரூராட்சியை ஊராட்சியாக மாற்றவேண்டும் என்ற தீா்மானத்தை 12ஆவது வாா்டு உறுப்பினா் சு.மனோகரன் கொண்டு வந்தாா்.

14,168 மக்கள் தொகை கொண்ட இப்பேரூராட்சியில் பழங்குடிகள், தாழ்த்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா் என பலரும் வாழ்ந்து வருகின்றனா்.

அதிகரட்டி பகுதி பேரூராட்சியாக இருப்பதால் வளா்ச்சி இல்லாமல் உள்ளது. எனவே, இதனை ஊராட்சியாக மாற்றவேண்டும் என்றாா்.

நீண்டவிவாதத்துக்குப் பிறகு 17 வாா்டு உறுப்பினா்களும் எதிா்ப்பு தெரிவித்து வாக்களித்ததால் தீா்மானம் தோல்வி அடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com