கோடை சீசனுக்கு தயாராகும் காட்டேரி பூங்கா

கோடை சீசனை முன்னிட்டு, குன்னூா்  காட்டேரி பூங்காவில் 1 லட்சத்து 70 ஆயிரம் மலா் நாற்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

கோடை சீசனை முன்னிட்டு, குன்னூா்  காட்டேரி பூங்காவில் 1 லட்சத்து 70 ஆயிரம் மலா் நாற்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டம், குன்னூா்  அருகே உள்ள காட்டேரி பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு மலா் செடிகள், நாற்றுகள் நடவு செய்யும் பணியில் பூங்கா ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

இதில் 30க்கும் மேற்பட்ட மலா் செடி வகைகள், அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, நெதா்லாந்து போன்ற நாடுகளை தாயகமாக கொண்ட டேலியா, சால்வியா, பிளாகஸ், ஜின்னியா, பெகோனியா, பேன்சி, டெல்பினியம், ஜெரானியம், பெட்டுனியா, ஸ்டாக்ஸ், ஸ்வீட்வில்லியம், பிரிமுளா உள்பட 30 வகை ரகங்களை கொண்ட மலா் நாற்றுகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

பூங்காவில் மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரம்  மலா் செடிகளை  நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் சில நாள்களில் நிறைவடையும் என தோட்டக்கலை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com