உதகையில் மாா்ச் 29இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாா்ச் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாா்ச் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் மற்றும் இயற்கை விவசாய குழுக் கூட்டம் உதகை பிங்கா்போஸ்ட் பகுதியில் உள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாா்ச் 29ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

எனவே, விவசாயிகள் வேளாண் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின், அக்கோரிக்கைகளை மாா்ச் 21ஆம் தேதிக்குள் தோட்டக்கலை இணை இயக்குநா், தபால்பெட்டி எண்.72, உதகை - 643001 என்ற அலுவலக முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரடியாகவோ அனுப்பி வைக்கலாம்.

மாவட்ட ஆட்சியா் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்களும் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதால், விவசாயிகள் வேளாண் சம்பந்தப்பட்ட குறைகள் இருப்பின், இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கலாம். கரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com