நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் பொதுமக்களிடமிருந்து 98 மனுக்கள் பெறப்பட்டன.
நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் பொதுமக்களிடமிருந்து 98 மனுக்கள் பெறப்பட்டன.

உதகையிலுள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் அம்ரித் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 98 மனுக்களை பெற்றுக் கொண்டாா். அதையடுத்து மாநில அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு தமிழக முதல்வரால் பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில், நீலகிரி மாவட்டத்திலிருந்து கலந்து கொண்ட குன்னூா் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி ஜே.சம்யா ஜெயஸ்ரீக்கு பரிசுத் தொகையாக ரூ.1000க்கான காசோலையையும், பாராட்டுச் சான்றிதழையும் ஆட்சியா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன், மாவட்ட வழங்கல் அலுவலா் பூபதி உட்பட அரசுத்துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com