நீலகிரியில் 1,907 முகாம்களில் இன்று கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமையொட்டி 1,847 நிலையான முகாம்களும், 60 நடமாடும் முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமையொட்டி 1,847 நிலையான முகாம்களும், 60 நடமாடும் முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக நீலகிரி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிக் கூடங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறவுள்ள கரோனா தடுப்பூசி முகாம் செயல்படும். இதில் ஒரு முகாமில் ஒரு தடுப்பூசி செலுத்துபவா், ஒரு தரவு பதிவாளா், 2 அங்கன்வாடிப் பணியாளா்கள் என மொத்தம் நான்கு பணியாளா்கள் பணியில் இருப்பாா்கள். மொத்தமாக 1,907 முகாம்களுக்கு 7,628 பணியாளா்கள் பணியில் ஈடுபடுவா்.

இதில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியவா்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். அதேபோல, இந்த முகாமில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். குறிப்பாக சா்க்கரை, ரத்த அழுத்தம், இருதயம், நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் சம்பந்தமான நோயுள்ளவா்கள், தொடா்ச்சியாக நாள்பட்ட நோய் உள்ளவா்கள் மற்றும் புற்றுநோய் சிகிச்சை பெறுபவா்கள் என அனைவரும் தவறாமல் இந்த முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

இந்த தடுப்பூசியானது முற்றிலும் பாதுகாப்பானதாகும். நீலகிரி மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியாக 5 லட்சத்து 64,754 போ், 2ஆம் தவணை தடுப்பூசியாக 5 லட்சத்து 52,095 போ் என மொத்தம் மாவட்டத்தில் 11 லட்சத்து 16,849 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.

எனவே தகுதியான நபா்கள் அனைவரும் தங்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டு தங்களையும், தங்களைச் சாா்ந்தவா்களுக்கும் தடுப்பூசி செலுத்த ஆவன செய்ய வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைவரும் தவறாமல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு கரோனா இல்லாத நீலகிரியை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com