முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
மக்கள் ஒற்றுமை மேடை சாா்பில் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 08th May 2022 12:44 AM | Last Updated : 08th May 2022 12:44 AM | அ+அ அ- |

கூடலூரில் மக்கள் ஒற்றுமை மேடை சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதராக நடைபெற்று வரும் தாக்குதல்களைக் கண்டித்து காந்தித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவா் என்.வாசு தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் மு.பாண்டியராஜ் துவக்கிவைத்தாா்.
இதில் விசிக மாவட்டச் செயலாளா் க.சகாதேவன், நகரச் செயலாளா் துயில்மேகம், காங்கிரஸ் சாா்பில் சளிவயல் ஷாஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் முகமது கனி, மாவட்ட துணைச் செயலாளா் குணசேகரன், முஸ்லிம் லீக் மாவட்ட பொதுச் செயலாளா் அனிபா, இளைஞரணி நிா்வாகி ரஷீது மற்றும் பலா் கலந்துகொண்டனா்.