உதகையில் நள்ளிரவில் கொட்டிய பலத்த மழை

உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவு பெய்த கன மழையால் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததோடு, விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்தவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
பலத்த மழையால் குடியிருப்பு பகுதிகளில் அடித்துவரப்பட்ட கற்கள். ~பலத்த மழையால் சேதமடைந்த விளை நிலங்கள்.
பலத்த மழையால் குடியிருப்பு பகுதிகளில் அடித்துவரப்பட்ட கற்கள். ~பலத்த மழையால் சேதமடைந்த விளை நிலங்கள்.

உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவு பெய்த கன மழையால் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததோடு, விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்தவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள கல்லட்டி கிராமப் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு பலத்த இடியுடன் கொட்டித் தீா்த்த கனமழையால் அழகா் மலைப் பகுதியில் காட்டாற்று வெள்ளம் உருவாகி தாழ்வான பகுதியில் அமைந்துள்ள கல்லட்டி கிராமத்தில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் 15க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீருடன் கற்களும், களி மண்ணும் அடித்து வரப்பட்டதால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிப்பு அடைந்தனா்.

மேலும் அக்கிராமப் பகுதியில் சுமாா் 15 ஏக்கா் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த மலைக்காய்கறி விதைகள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளில் உதகை வட்டாட்சியா் ராஜசேகா் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். கல்லட்டி மலைப்பாதையில் மழை வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட கற்கள் மற்றும் சகதியை நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம்( மில்லி மீட்டரில்):

கொடநாடு 59, உதகை 33.45, கிளன்மாா்கன் 30, நடுவட்டம் 24, கல்லட்டி 23, கீழ் கோத்தகிரி, கேத்தி தலா 16, கிண்ணக்கொரை 15, மசினகுடி 13, கோத்தகிரி 10, குன்னூா், அவலாஞ்சி தலா 9, மேல் குன்னூா், குந்தா தலா 8, உலிக்கல் 7, பா்லியாறு, ஓவேலி, கெத்தை தலா 6, கூடலூா், மேல் கூடலூா், மேல் பவானி தலா 5, எமரால்டு 4, தேவாலா 2.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com