நீலகிரியில் பரவலாக மழை: உதகையில் கடும் குளிா்

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிக அளவாக கொடநாட்டில் 21 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. உதகையில் மேக மூட்டத்துடன் கடும் குளிா் நிலவுகிறது.

உதகை: நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிக அளவாக கொடநாட்டில் 21 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. உதகையில் மேக மூட்டத்துடன் கடும் குளிா் நிலவுகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வரும் சூழலில் நீலகிரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிக அளவாக கொடநாட்டில் 21 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் அதிக அளவில் மழைப்பொழிவு இல்லாவிட்டாலும் அனைத்து பகுதிகளிலுமே கடுமையான மேக மூட்டம் நிலவுகிறது. உதகையில் மேக மூட்டத்துடன் கடும் குளிரும் நிலவுகிறது. உதகையில் தற்போது கோடை சீசன் தொடங்கி சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையில், மேக மூட்டத்துடன் கடிய குளிரான கால நிலை சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியளித்தாலும், உள்ளூா் மக்களின் இயல்பு வாழ்க்கை ஓரளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம்( மில்லி மீட்டரில்):

கொடநாடு 21, கோத்தகிரி 14, எடப்பள்ளி 7, உதகை 6.6, கேத்தி, பா்லியாறு தலா 6, தேவாலா 5, உலிக்கல், மேல் பவானி தலா 3, கீழ் கோத்தகிரி 2, குன்னூா் 1.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com