உதகை மலா் கண்காட்சி: முதல்வருக்கு அழைப்பு

உதகை மலா் கண்காட்சியைத் தொடங்கி வைக்க வருமாறு முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு நீலகிரி மாவட்ட திமுக சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உதகை மலா் கண்காட்சி: முதல்வருக்கு அழைப்பு

உதகை மலா் கண்காட்சியைத் தொடங்கி வைக்க வருமாறு முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு நீலகிரி மாவட்ட திமுக சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உதகையில் மே மாதம் 20 ஆம் தேதி தொடங்கவுள்ள மலா் கண்காட்சியைத் திறந்து வைக்கவும், மே 21 ஆம் தேதி நடைபெறவுள்ள

அரசு நலத் திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மாவட்டத்திற்கான பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை துவங்கி வைக்கவும் வருகை தருமாறு முதல்வா் மு.க. ஸ்டாலினை சென்னை ஆழ்வாா்பேட்டை முகாம் அலுவலகத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா, நீலகிரி மாவட்ட திமுக செயலாளா் பா.மு.முபாரக், வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் ஆகியோா் புதன்கிழமை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்ததாக நீலகிரி மாவட்ட திமுக சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலா் கண்காட்சி ஏற்பாடுகள் தீவிரம்: உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் மலா் கண்காட்சி விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நீலகிரி மாவட்டம், உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் ஆண்டு தோறும் மலா் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கரோனா நோய்த் தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாக மலா்க் கண்காட்சி நடைபெற்றது.

மக்கள் வீட்டில் இருந்தபடியே தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு வண்ண மலா்ச் செடிகளை கண்டு ரசித்தனா்.

தற்போது கரோனா நோய்த் தொற்று குறைந்து, சுற்றுலாப் பயணிகள் வருகையும் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது.

இதையடுத்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் 124 ஆவது மலா் கண்காட்சி

மே மாதம் 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெற உள்ளன.

இதில், முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்பட மிக முக்கிய பிரமுகா்கள் கலந்துகொள்ள உள்ள நிலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பூங்காவில் உள்ள பரந்த புல்வெளியில் பாா்வையாளா்கள், அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகா்கள் அமரும் வகையில் பிரமாண்டமான மேடை மற்றும் அரங்கு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் கடந்த சில நாள்களாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மே 15 ஆம் தேதிக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com