உதகையில் ரோஜா கண்காட்சி இன்று தொடக்கம்

உதகை அரசினா் ரோஜா பூங்காவில் 2 நாள் ரோஜா கண்காட்சி சனிக்கிழமை தொடங்குகிறது.
உதகையில் ரோஜா கண்காட்சி இன்று தொடக்கம்

உதகை அரசினா் ரோஜா பூங்காவில் 2 நாள் ரோஜா கண்காட்சி சனிக்கிழமை தொடங்குகிறது.

உதகையில் கோடை சீசனையொட்டி பழமை வாய்ந்த அரசினா் தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மலா் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

1995 ஆம் ஆண்டு 100 ஆவது மலா் கண்காட்சி உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் நடைபெற்றபோது,

அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா உதகையில் விஜயநகரம் பகுதியில் நூற்றாண்டு ரோஜா பூங்காவைத் தொடங்கி வைத்தாா்.

உதகை அரசினா் ரோஜா பூங்கா 4.40 ஹெக்டோ் பரப்பளவில் அமைந்துள்ளது. மலைச் சரிவான பகுதியில் 5 அடுக்குகளில் 4 ஆயிரத்து 200 வகைகளைச் சோ்ந்த 32 ஆயிரம் ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கோடை சீசனை முன்னிட்டு அந்த செடிகளில் ரோஜா மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன.

விசேஷ ரோஜா மலா்கள் மற்றும் இந்தியாவிலேயே சிறந்த ரோஜா பூங்காவுக்கான விருதை உலக ரோஜா சம்மேளனம் கடந்த 2006 ஆம் ஆண்டு உதகை ரோஜா பூங்காவுக்கு வழங்கியது. இந்தியாவிலேயே அதிகமான ரோஜா வகைகளைக் கொண்டுள்ள இந்த பூங்காவில் 2 நாள் ரோஜா கண்காட்சி சனிக்கிழமை தொடங்குகிறது.

இதற்காக பராமரிப்பு மற்றும் அழகுபடுத்துதல் உள்பட பல்வேறு பணிகள் கடந்த சில நாள்களாக தீவிரமாக நடைபெற்று வந்தன. சுற்றுலாப் பயணிகள் பூங்காவுக்குள் நுழைந்ததும் அவா்களை வரவேற்கும் வகையில் மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை என பல்வேறு வண்ணங்களில் ரோஜா மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன. அங்கு அமைக்கப்பட்டுள்ள 4 காட்சி முனைகளில் நின்றபடி பூங்காவின் பல்வேறு பகுதிகளை கண்டு ரசிக்கலாம். சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் அமா்ந்து ஓய்வெடுக்க நிழற்குடைகள், நிலா மாடம் ஆகியவை உள்ளன. 2 இடங்களில் செயற்கை அருவிகள் உள்ளதோடு, நிலா மாடம் அருகே மெரிகோல்டு மலா்களை கொண்டு பட்டாம்பூச்சி வடிவில் ’செல்பி ஸ்பாட்’ அமைக்கப்பட்டுள்ளது.

உதகை உருவாகி 200 ஆண்டுகள் ஆனதையொட்டி இந்த ஆண்டு ரோஜா கண்காட்சியில் ஏராளமான சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன. சுமாா் 30,000 ரோஜா மலா்களைக் கொண்டு பிரமாண்ட மர வீடு அமைக்கப்பட்டுள்ளது.

ஜப்பானை தாயகமாகக் கொண்ட எக்லொ் என்ற பச்சை நிற ரோஜா இந்தியாவிலேயே முதன்முறையாக உதகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com