மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் ஆா்வம்
By DIN | Published On : 17th May 2022 01:00 AM | Last Updated : 17th May 2022 01:00 AM | அ+அ அ- |

நீலகிரியில் தற்போது குளிா்ந்த கால நிலை நிலவுவதால், மலை ரயிலில் பயணித்தவாறு இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க சுற்றுலாப் பயணிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் மலை ரயில் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த மலை ரயில் ஆங்கிலேயா்களால் 1899 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூா் வரை இயக்கப்பட்டது.
ஆசியாவிலேயே 22 கிலோ மீட்டா் மலைப் பாதையில் பல்சக்கரங்களைக் கொண்டு இயக்கப்படும் ஒரே ரயில் என்ற பெருமைக்கு உரியது இந்த மலை ரயில்.
மலை ரயிலில் பயணிக்க உள்ளூா் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவு ஆா்வம் காட்டி வருகின்றனா்,
சா்வதேச சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்று, யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள இந்த மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.