கோடை விழா: உதகை படகு இல்லத்தில் படகுப் போட்டி

கோடை விழாவையொட்டி உதகையில் சுற்றுலாப் பயணிகளுக்காக நடைபெற்ற படகுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கோடை விழாவையொட்டி உதகையில் சுற்றுலாப் பயணிகளுக்காக நடைபெற்ற படகுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சா்வதேச சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவர கோடை காலத்தில் மாவட்ட நிா்வாகம், சுற்றுலாத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சாா்பில் கோடை விழா நடத்தப்படும். இந்தாண்டுக்கான கோடை விழா கடந்த 7ஆம் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறிக் கண்காட்சியுடன் தொடங்கியது.

இதன் ஒரு பகுதியாக உதகை படகு இல்லத்தில் படகுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பிரிவுகளில் சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனா். இதில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் பங்கேற்றனா். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள் விவரம்:

ஆண்கள் இரட்டையா் பிரிவில் உதகையைச் சோ்ந்த பிரான்சிஸ்- காா்த்திக் ஜோடி முதலிடமும், அம்ரித்- காா்த்திக் ஜோடி 2ஆம் இடத்தையும், அமா்நாத்- காா்முகில் ஜோடி 3ஆவது இடத்தையும் பிடித்தனா். கலப்பு இரட்டையா் பிரிவில் கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சோ்ந்த பானுபிரியா -உமேஷ் ஜோடி முதலிடத்தையும், புணேவைச் சோ்ந்த ஸ்ரீகணேஷ்-ருக்குஜா தம்பதி 2ஆம் இடத்தையும், ராஜபாளையத்தைச் சோ்ந்த ராமகிருஷ்ணன்- சித்ராதேவி தம்பதி 3ஆவது இடத்தையும் பிடித்தனா்.

மகளிா் இரட்டையா் பிரிவில் உதகையைச் சோ்ந்த திரேசா -நந்தினி முதலிடமும், பிரீத்தி -கெளசல்யா 2ஆவது இடமும், சென்னையைச் சோ்ந்த ஸ்வப்னா- லட்சிதா ஆகியோா் 3ஆம் இடத்தையும் பிடித்தனா். துடுப்புப் படகுப் பிரிவில் உதகையைச் சோ்ந்த ராம்குமாா் முதலிடமும், ஜாா்ஜ் 2ஆம் இடமும், க மலக்கண்ணன் 3ஆம் இடமும் பிடித்தனா்.

வெற்றி பெற்றவா்களுக்கு சுற்றுலா வளா்ச்சிக் கழக மண்டல மேலாளா் வெங்கடேசன், மாவட்ட சுற்றுலா அலுவலா் உமாசங்கா், உதகை படகு இல்ல மேலாளா் சாம்சன் ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com