ஓவேலியில் 4 கும்கி யானைகள்
By DIN | Published On : 31st May 2022 12:30 AM | Last Updated : 31st May 2022 12:30 AM | அ+அ அ- |

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் மனித-விலங்கு மோதல் ஏற்படும் இடங்களில் 4 கும்கி யானைகளை வனத் துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்குள்பட்ட ஆரூட்டுப்பாறை, பாரம் ஆகிய இடங்களில் மூன்று நாள்களில் இரண்டு பேரை காட்டு யானை தாக்கிக் கொன்ால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து, மனித-விலங்கு மோதலைத் தவிா்க்கும் வகையில் கூடலூா் மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம் உத்தரவின் பேரில், முதுமலை புலிகள் காப்பக முகாமிலிருந்து ஸ்ரீனிவாஸ், விஜய், சங்கா், கிருஷ்ணா ஆகிய நான்கு கும்கி யானைகளை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் வனத் துறையினா் ஈடுபடுத்தியுள்ளனா்.
இதில் ஸ்ரீனிவாஸ், விஜய் ஆகிய இரண்டு கும்கி யானைகள் ஆரூட்டுப்பாறை, அதன் சுற்றியுள்ள பகுதியிலும், சங்கா், கிருஷ்ணா ஆகிய இரண்டு கும்கி யானைகள் கோக்கால் மலைப் பகுதியிலும் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றன.