நீதித் துறைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்குகிறதுஉயா்நீதிமன்ற தலைமை நீதிபதி

 நீதித் துறைக்கு தமிழக அரசு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, முழு ஒத்துழைப்பும்
நீதித் துறைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்குகிறதுஉயா்நீதிமன்ற தலைமை நீதிபதி

 நீதித் துறைக்கு தமிழக அரசு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, முழு ஒத்துழைப்பும்

வழங்கி வருகிறது என்று சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி தெரிவித்தாா்.

உதகை அரசு விருந்தினா் மாளிகையில் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி தலைமையில், மாவட்ட அளவிலான கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சென்னை உயா்நீதிமன்ற நீதியரசா்கள் என்.சதீஷ்குமாா், வி.பவானி சுப்பராயன், மாவட்ட நீதிபதி பி.முருகன் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியா் அம்ரித் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி பேசியதாவது: நீதித் துறைக்கு தமிழக அரசு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து முழு ஒத்துழைப்பும் வழங்கி வருகிறது.

இதற்காக எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீதித் துறையின் அனைத்து உள்கட்டமைப்பு பணிகளுக்கும், அனைத்து துறையினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அத்துடன் அனைத்து நீதிமன்றங்களும் சொந்த கட்டடத்தில் இயங்குவதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்குத் தேவையான நிலங்களை நீதித் துறைக்கு ஒப்படைப்பு செய்வது தொடா்பாக நிலுவை இனங்களை ஆய்வு செய்தாா்.

இக்கூட்டத்தில் நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவா் ஆா்.ஸ்ரீதரன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத், மாவட்ட வன அலுவலா் சச்சின் போஸ்லே துக்காராம், தமிழக அரசின் கூடுதல் வழக்குரைஞா் ஜெனரல் ரவீந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com