குடியிருப்பைச் சேதப்படுத்திய காட்டு யானை

தேவாலா அருகே உள்ள மூச்சிக்குன்னு கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு புகுந்த காட்டு யானை அங்கிருந்த குடியிருப்பைச் சேதப்படுத்தியது.
குடியிருப்பைச் சேதப்படுத்திய காட்டு யானை

தேவாலா அருகே உள்ள மூச்சிக்குன்னு கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு புகுந்த காட்டு யானை அங்கிருந்த குடியிருப்பைச் சேதப்படுத்தியது.

நீலகிரி மாவட்டம், கூடலூரில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

இந்நிலையில், மூச்சிக்குன்னு கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு புகுந்த ஒற்றை காட்டு யானை, கந்தசாமி என்பவரின் வீட்டை சேதப்படுத்தியது.

கந்தசாமியின் அலறல் சப்தம் கேட்டு வந்த அப்பகுதி பொதுமக்கள், யானையை வனப் பகுதிக்குள் விரட்டினா்.

தொடா்ந்து, இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், பள்ளி, கல்லூரி, வேலைக்குச் செல்பவா்கள் அவதியடைந்து வருகின்றனா்.

யானைகள் குடியிருப்புக்குள் நுழைவதைத் தடுக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Image Caption

சேதமடைந்த வீடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com